Latest News

மோடியை கடுமையாக சாடிய உமாபாரதி: வீடியோ சி.டி.யை வெளியிட்டது காங்கிரஸ் Cong releases CD of Uma Bharti slamming Modi

அருண் ஜெட்லியை ஆதரித்து விவேக் ஓபராய் பிரச்சாரம் Vivek Oberoi campaigns for Jaitley

தமிழகத்தில் எந்த அலையும் வீசவில்லை: கருணாநிதி Karunanithi says no wave in Tamilnadu

நடிகை குஷ்பு பிரசாரம் திடீர் ரத்து Actress Khushboo Propaganda cancels

7 வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்: மும்பை கொல்கத்தா மோதல் 7th ipl today start Mumbai Kolkata conflict

கூடங்குளத்தில் முழு அளவிலான மின்சார உற்பத்தி: முன்னாள் தலைவர் பேட்டி Full range production of electricity kudankulam Interview with Former President

நைஜீரியாவில் பள்ளி மாணவிகளை கடத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகள் Islamists abduct many schoolgirls in Nigeria

அரசியல் பிரபலங்களின் சினிமாக்களை தனியார் டி.வி.யில் ஒளிபரப்ப தடை இல்லை Channels except DD can show films of actors in fray

வாரணாசியில் மோடி தோற்றால் யாருமே அவரை பிரதமராக்க மாட்டார்கள்: கெஜ்ரிவால் KejriwalI says If Modi loses in Varansai no one will make him PM

கணவரைக் கொன்ற இந்தியப் பெண் ஓமனில் இருந்து வெளியேற்றம் Indian woman jailed in Oman for killing hubby to be deported

மோடி மட்டுமே இந்தியாவை முன்னேற்ற முடியும்: சந்திரபாபு நாயுடு India can only improve Modi Chandrababu Naidu

தங்கத்தால் செய்யப்பட்ட சட்டை அணியும் நகைப் பிரியர் Man wearing shirt made of Gold

முஸ்லிமாக இல்லாமல் இந்தியனாக வாக்களியுங்கள் அஜ்மீர் மதகுரு வேண்டுகோள் Vote as an Indian not as Muslim Ajmer Dargah Dewan

சீனாவில் 4 கால், 4 கைகளுடன் பிறந்த விநோத குழந்தை Miracle baby born with FOUR hands and FOUR feet in Chinese hospital

வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக ஏழைகளை ஒழிக்க விரும்பும் காங்கிரஸ்: வசுந்தரா ராஜே Cong wants to finish poor instead of abolishing poverty Raje

ரஷிய ஆதரவாளர்களிடம் இருந்து நகரை மீட்க உக்ரைன் படைகள் விரைந்தன Ukraine troops tanks push towards Slavyansk

இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15 1923 insulin used first time in world 1923

Right Side

கர்நாடக பகுத்தறிவாதியும், தமிழ்நாட்டு பகுத்தறிவாதியும்...

14 Jun 13 11:29:04 AM by Tamil  |  Tags : உலக செய்தி , World  |  164 views  |  0 comments

சிறிது பகுத்தறிவு பேசிவிட்டால் - அவன் தமிழின எதிரியாக இருந்தாலும், அவன் பாவங்களை திராவிட திருவாளர்கள் கழுவ தயாராகிவிடுகிறார்கள் என்பதை சுயமரியாதைக்காரர்கள் மீண்டும் நிருபித்துவிட்டார்கள் -பகுத்தறிவாதியாம் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா விவகாரத்தில். சித்தராமையா கர்நாடக முதல்வரானதும், திராவிடர் கழக கி.வீரமணி அவர்களால் மிக பெரிய அறிக்கை தரப்படடது. எதற்காம்? பகுத்தறிவாதி, சமூகநீதி பேசுபவர் கர்நாடக முதல்வராகி விட்டாராம். நாம் கூட அறிக்கையை வாசித்து மகிழ்ந்தோம்.

ஆனால், அதனால் தமிழர்கள் நலன் ஏதும் மேம்பட்டதா? எடியூரப்பாவை போலவே எட்டப்பனாக காவிரி பிரச்சனையில் சித்தராமையா? இதோ சித்தராமையா முதல்வரானதும் அய்யா கி.வீரமணி விட்ட அறிக்கை - சுருக்கமாக. பகுத்தறிவாளர், சமூகநீதியாளர் சித்தராமையா கருநாடக முதல்வரானதற்கு பெரியார் தொண்டர்களின் வாழ்த்துக்கள்! காங்கிரஸ் மேலிடம் - ஒரு சீரிய முடிவினை - ஜனநாயக அடிப்படையில் முதல்வர் யார் என்பதை வெற்றி பெற்ற கட்சிக்காரர்களுக்கே முடிவு செய்யும் வாய்ப்பினை நல்கியுள்ளது. இது வரவேற்கத் தக்கது.

மிகப் பெரும்பான்மையான சட்டப் பேரவை உறுப்பினர்கள் (காங்கிரஸ்) - சித்தராமையாவையே தேர்வு செய்துள்ள காரணத்தால், அவரை கருநாடக முதல் அமைச்சராக ஆக்க முடிவு செய்து அறிவித்து விட்டார்கள்.திரு. சித்தராமையா அவர்கள், மிகச் சிறுபான்மையான குறும்பர் (ஆடு மேய்க்கும்) அடித்தள ஜாதியிலிருந்து வந்த வழக்குரைஞர்; நேர்மையாளர். அடிப்படையில் பகுத்தறிவாளரான இவர் ஒரு சமதர்மவாதி. எல்லோருக்கும் இனியவர். ஏற்கெனவே இவர் முன்பு கருநாடக அரசின் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்துபோது, ஏழு முறை வரவு - செலவு திட்டங்களை அளித்தவர். கடனில் தத்தளித்த மாநிலத்தை மிகச் சிறப்பாக பொருளாதாரத்தில் எழுந்து நடமாடும் நிலைக்கு உயர்த்திய ஆற்றலும், அறிவும் கொண்டவர்! என்றெல்லாம் பாராட்டு பத்திரம் வாசித்தார் கி.வீரமணி.

எந்த காலத்தில் டெல்லி காங்கிரஸ் - எந்த மாநில காங்கிரஸாரின் உணர்வுகளை மதித்துள்ளது. (அமைச்சரவையில் இடம் கிடைக்காத மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதால் அவர்களின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருவகின்றனர். கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.பி.மாலகா ரெட்டிக்கு அமைச்சர் பதவி வழங்கப் படாததைக் கண்டித்து யாத்கிரில் உள்ள கட்சி அலுவலகத்தை அவரது ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினார்கள். அதேபோல் மாண்டியா மாவட்டம் ரமணகராவில் டி.கே.சிவக்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மைசூரில் தன்வீர் சயித்தின் ஆதரவாளாகள் போராட்டம் நடத்தினர்.)

அறிக்கையின் ஆரம்பமே நகைப்புக்கு இடமளித்து. சரி, சித்தராமையாவது அறிக்கையில் சொன்னது போல இருந்தாரா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். முக்கியமாக காவிரி விவகாரத்தில். அதை பற்றி ஏதும் பேசாத திராவிட பகுத்தறிவாளர்கள் - காவிரி நீர் விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிரான சித்தராமையா நிலையை பற்றி எழுத வேண்டும் என்று நினைக்காமல் -மீண்டும் சித்தராமையாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார்கள். எதற்காம்? பகுத்தறிவாக பேசிவிட்டாராம். அவர் பேசியதை கேளுங்கள்.

சுதந்திரத்திற்குப் பிறகு கருநாடகத்தில் நடைபெற்ற சமூகநீதிப் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் பங்க ளிப்பு மகத்தானது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பிற்படுத்தப் பட்ட சமுதாயத்திற்கு சமூகநீதி கிடைக்கும். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களை அதிகாரத்தில் வைத்து அழகு பார்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். என்கிறார். பாரதிய லோக் தளக்கட்சி, ஜனதா கட்சி, ஜனதா தள கட்சி என்று பல கட்சிகளுக்கு போய் கடைசி கடைசியாய் இந்திய மக்கள் ஜனதா தளம் என்ற கட்சியைத் தொடங்கினார். போணி நடக்காமல் போகவே - காங்கிரஸ்க்கு வந்த சித்தராமையா தான் காங்கிரஸை இந்த புகழு புகழ்கிறார்.

இந்த புகழ் காங்கிரஸை சேரும் என்றால் நாடு ஏன் இப்படி உள்ளது. சித்தராமையா சொல்வதெல்லாம் சரியா என்று இங்குள்ள திராவிட பகுத்தறிவாள்கள் தான் சொல்ல வேண்டும். திராவிட பகுத்தறிவாளர்கள் கண்டு கொள்ளாமல் விட்ட அவரின் சில பகுத்தறிவை பார்ப்போம். பகுத்தறிவாதி, சமூகநீதி பேசும் சித்தராமையா - தம் மாநில அமைச்சரவையில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் மந்திரி பதவி தந்திருக்கிறார். யாரென்றால் ஒரு நடிகைக்கு. கூடவே ஒரு சினிமா நடிகருக்கும் கேபினட் மந்திரி பதவி. என்ன சமூகநீதி? யார் அந்த நடிகர் அம்பரிஷ். இவர் மத்திய அமைச்சராக இருந்து, காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரான நடிகை உமாஸ்ரீ. 2001 முதல், 2007 வரை நடிகை உமாஸ்ரீ காங்கிரஸ் எம்.எல்.சி.,யாக இருந்தவர். மகளிர் முன்னேற்றம் குறித்தான அக்கறை - இவரை தவிர வேறு எவருக்குமில்லை போலும் கர்நாடக மாநிலத்தில். அடுத்ததாக இந்த பகுத்தறிவாதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., வாஸ்து சரியில்லை என்று சட்டசபையின் ஒரு அறையை இடித்திருக்கிறார். திராவிட பகுத்தறிவு ஆதரிக்கும் எல்லோரும் (உள் மாநிலம், வெளி மாநிலம்... உள்நாடு, வெளிநாடு என்று எல்லோரும்) இப்படி தான் இருப்பார்கள் போலும். அடுத்த முறையாவது பகுத்தறிவாதி, சமூகநீதியாளர் என்று யாருக்கேனும் பாராட்டு பத்திரம் வாசிக்க நினைத்தால் தராதரம் பார்த்து வாசியுங்கள்.

முத்தாய்ப்பாக காவிரி நீர் பிரச்சனையிலும் வஞ்சிக்கும் வழக்கமான கர்நாடக அரசியல்வாதி போலவே - இந்த சமூகநீதியாளர் சித்தராமையா. என்ன சொல்கிறார் என்று பாருங்கள். ஜூன் மாதத்திற்குள் மழை பெய்து அணைகள் நிரம்பும் என்று நம்புகிறேன், அவ்வாறு நிரம்பி விட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்கிறார். கிடைக்கிற தண்ணீரை இரண்டு மாநில மக்களும் பகிர்ந்து கொள்வதும் சமூகநீதி தான் என்று எந்த பகுத்தறிவாளர், இந்த பகுத்தறிவாளருக்கு சொல்ல போகிறாரோ? மேலும் சொல்கிறார். 10 டிஎம்சி தண்ணீர் விடும்படி தமிழகம் விடுத்துள்ள கோரிக்கை குறித்து ஜூலை மாதத்தில் பரிசீலிப்போமாம் என்கிறார்.

ஜூன் மாதத்திற்கு தண்ணீர் கேட்டால் ஜூலையில் பரிசீலிப்போம் என்கிறார். கர்நாடக காங்கிரஸும், தமிழக காங்கிரஸும் காவிரி பிரச்சனைக்காக கலந்து பேசி ஒரு சுமூக தீர்வை எட்ட நினைக்காது. கர்நாடக பாரதிய ஜனதாவும், தமிழக பாரதிய ஜனதாவும் அதே வழியில் தான் செல்கிறது. தமிழக சமூகநீதியும், கர்நாடக சமூகநீதியும் இது குறித்து பேசும் என்ற நப்பாசையிலும் விழுந்தது மண்.  இந்நேரம் மதவாதக்கட்சி, கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்து இருந்தால் - பக்க பக்கமாக அறிக்கை எழுதி இருப்பார்கள். ஆக, வழக்கம் போல தமிழ் மக்களின் வாழ்வதாரங்களை பாதிக்கும் ஒரு விஷயத்தை பற்றி பேசக் கூட கர்நாடகத்தில் யார் ஆட்சியிலுள்ளது என்று பார்த்து, சித்தராமையாவுக்கு வலிக்காமல் விமர்சிக்கிறார்கள்.

கர்நாடக பகுத்தறிவாளனுக்கு தமிழக பகுத்தறிவாளனுக்கு ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. அதுதம் மாநில மக்களின் நலன் என்று வரும் போது - அதற்கு எது தடையாக இருந்தாலும் தூக்கி எறிவார்கள். தமிழக பகுத்தறிவாளர்களோ, கடவுளை நம்பி ஏமாறும் பக்தனை போல கர்நாடக பகுத்தறிவாதி சித்தராமையா பார்த்துக்குவார் என்று நம்பி ஏமாந்து நிற்பார்கள். இதை தானே மொழி வாரிய்க மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பிரச்சனைகளை கைகழுவி விடுவதில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறோம்.

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more

TAMIL STORYS

உங்கள் கருத்து
Name Email Id
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Enter The Number in Box : 8695

கவிதையின் காதலன்

14 Jun 13 09:11:47 AM by Tamil  |  Tags : , Poetry  |  71 views  |  comments

வார்த்தைகளால் கோர்க்கப்பட்டிருக்கிறாய் நீ..  எனக்கான கவிதையை அவ்வப்போது எடுத்துக் கொள்கிறேன் நான்..  என் கவிதையின் அழகிற்கு காரணம்  இப்போதாவது தெரிகிறாதா...

 |  Share Facebook  |  Share Twitter  |  Share Read more


www.tamilstorys.com